‘முடியும் என்ற நம்பிக்கையே டக்ளஸ் தேவானந்தாவின் மூலதனம்” – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Sunday, November 6th, 2016

வரலாறு என்பது வழிநடத்துவபர்களது செயற்பாடுகளுடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. அந்தவகையில் எமது கட்சியின் வரலாறும் சுயநலமற்ற வழிகாட்டியான செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது தூர நோக்குள்ள சிந்தனைகளுடாக தடம்புரளாது தமிழ் மக்கள் மத்தியில் பயணித்து அதிகளவான தேவைகளை பெற்றுக்கொடுத்து தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடே 1987 களில் அவர் எடுத்துக்கொண்ட இணக்க அரசியலூடான ஜனநாயக பாதைக்கு இன்று இதர தமிழ் கட்சிகளையும் வருகைதர வைத்துள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

11

இன்றையதினம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற யாழ்.மாவட்ட வட்டார ரீதியான நிர்வாக குழு உறுப்பினர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

பல நூறு  தோழர்களது தியாகங்களுடாக கட்டியெழுப்பப்பட்ட எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியானது தீர்க்கதரிசனம் மிக்க தனது தலைமையின் வழிநடத்தல்களூடாக குடாநாட்டில் வாழ்வியலை தேடிக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு நிரந்தரமான வாழ்வியலை பெற்றுக்கொடுக்க வழிகோலியுள்ளது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

09

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா முடியும் என்ற நம்பிக்கையை மட்டுமே பெரும் மூலதனமாக கொண்டு தமிழ் மக்களுக்கான பெரும்பணிகளை தனக்கு கிடைத்த குறைந்தளவான அரசியல் அதிகாரங்களைக்கொண்டு மேற்கொண்டுவருகின்றார்.

கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட படிப்பினைகள் எமது மக்களுக்கு சிறந்ததொரு பாடமாக அமையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த படிப்பினைகளூடாக மக்கள் தெளிவான ஒரு நிலைப்பாட்டை பற்றிக்கொள்ள நாம் அனைவரும் ஒவ்வொரு கிராமங்களினதும் வட்டார ரிதியான செயற்பாடுகளை பலப்படுத்தவதனூடாக வெற்றிகொள்ளமுடியும் என தெரிவித்தார்.

Related posts: