வரவு செலவுத் திட்டத்திற்கான தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள் பிரதமரிடம் கையளிப்பு!

Monday, November 7th, 2022

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

உழைக்கும் பாட்டாளி மக்கள் இதுவரையில் வெற்றி கொண்டவற்றை பாதுகாத்து அவற்றில் உள்ள விடயங்களில் இருந்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதன் போது தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்காக தொழிற்சங்கங்கள் ஆலோசனைகளை  பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம்  முன்வைத்துள்ளன.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொண்டு அனைத்து தொழிற்சங்கங்களும் யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தற்போது வழங்கக்கூடிய நிவாரணங்களை அரசாங்கம் வழங்க பின்னிற்காது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளுடன் இம்முறை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுமென்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: