பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய யோசனை!

Sunday, May 28th, 2023

தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அயமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது.

குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு, 9 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் கிடைக்கும். மாணவர்களின் நாளாந்த செலவுக்காக 3 இலட்சம் ரூபா கிடைக்கப்பெறும்.

அவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறைவு செய்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சித்திரைக்கு முன்னர் இலங்கையில் முதலாவது தடுப்பூசி வழங்கப்படும் - ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்...
இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் ஜ...
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து - மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்ச...

கிளிநொச்சி - பூநகரி வீதியில் டிப்பர் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து : தாய் பலி - மகள் படுகாயம்!
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது - சுகாதார அமைச்சு எச்சரிக்...
டேராக் கட்டணங்கள் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதி - அமைச்சர் ந...