டேராக் கட்டணங்கள் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதி – அமைச்சர் நமல் ராஜபக்ஷ நடவடிக்கை!

Wednesday, June 23rd, 2021

எந்தவொரு டேரா தரவுக் கட்டணமும் இன்றி வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்கும் முறையொன்று இந்த மாதம்முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, எல்.எம்.எஸ் முறையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளுக்குரிய திட்டம் ஜூன் மாதம் 25 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் – அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4G தொழில்நுட்பத்துடன் 10 ஆயிரம் பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்நிலைக் கல்வியை அணுகுவதில் கிராமப்புறங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அத்துடன், சரியான திட்டமின்றி சில பகுதிகளில் தொலைபேசி நிறுவனங்களால் தொலைபேசி கோபுரங்கள் கட்டப்படுவதால் இந்த பிரச்சினைகள் எழுந்துள்ளது என்றும் அமைச்சர் நமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: