புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை – மருத்துவ பீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்!

Wednesday, February 13th, 2019

சுகாதார அமைச்சால் வழங்கப்படவுள்ள வைத்திய சேவைக்கான புதிய நியமனங்கள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதால் வைத்தியசேவைக்கான புதிய நியமனங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தி மருத்துவ பீட,  மாணவ பெற்றோர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் 5 வருட மருத்துவக் கல்வியைப் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர்களின் சேவை பயிற்சி நலன்கருதி ஒரு வருடத்துக்கு பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான தற்காலிக நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

அதன் பின்னரே வைத்திய சங்கத்தினூடாக வைத்தியர் என்ற அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கப்படும்.

ஆனால் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள தங்காலிக நியமனங்கள் அநேகமாக வெளிநாடுகளில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு தடவைகளுக்கு மேல் பரீட்சைகளுக்குத் தோற்றி சித்தி பெற்றவர்கள் எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

Related posts: