தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பண மோசடி – விசாரணைகள் ஆரம்பம்!

Tuesday, February 5th, 2019

நாட்டின் சில பகுதிகளில் தானியங்கி(ATM) இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண மோசடி குறித்து பொலிஸ் தடுப்பு விசாரணை திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பண மோசடி இடம்பெற்றமை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குற்ற தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த மோசடி வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கிய குழு ஒன்றினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தானியங்கி இயந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டி.வி கமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான முறையில், சிலரது புகைப்படங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனை கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: