உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!
Saturday, January 1st, 2022
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நிதி அமைச்சரின் அங்கீகாரத்துடன் சந்தையில் தற்போதைய விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
கிரிக்கெட் இடைக்கால சபையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கொண்ட அறிவிப்பு பக்கச் சார்பானது...
அரச ஊழியர்களின் ஊதிய அதிகரிப்பு - உடன் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
|
|
|


