மியூனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு செல்கின்றார் அமைச்சர் அலி சப்ரி – இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டமைச்சர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் தகவல்!

Thursday, February 15th, 2024

ஜெர்மனியில் நடைபெறவுள்ள மியூனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி அழைக்கப்பட்டுள்ளார்.

1963 இல் நிறுவப்பட்ட Munich Security Conference 2024, சர்வதேச பாதுகாப்புக் கொள்கைகளை விவாதிப்பதற்கான உலகின் முதன்மையான தளங்களில் ஒன்றாக  உள்ளது.  சர்வதேச பாதுகாப்பு சமூகத்துக்குள் தொடர்ச்சியான, நிர்வகிக்கப்பட்ட மற்றும் முறைசாரா உரையாடல்களை வளர்ப்பதன் மூலம் நம்பிக்கையை வளர்ப்பது,  மோதல்களில்  அமைதியான தீர்வுக்கு பங்களிப்பது இதன் நோக்கமாகும். 

வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 17 ஆம் திகதி “உலகளாவிய பொதுமைகளைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் மாநாட்டு அமர்வில் உரையாற்றுவார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் அலிசப்ரி பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: