சமுர்த்தியூடாக கிடைக்கின்ற நலன்ககளைக்கொண்டு பொருளாதார ரீதியில் மேம்படும் வழிவகைகளை உருவாக்குங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் வலியுறுத்து!

Wednesday, July 7th, 2021

சமுர்த்தி திட்டத்தினூடாக கிடைக்கின்ற நலன்களை உங்களை உயர்த்திக்கொள்ளும் ஏணிப்படியாக பற்றிப்பிடித்து வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் மேம்பட்டுக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்குங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகர் மேற்கு சமுர்த்தி வங்கியில் நடைபேற்ற சௌபாக்கியா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

கோட்டபய ராஜபக்சவின் ராஜபக்சவினால் கடந்த முதலாம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா நிகழ்ச்சித் திட்டத்தினூடாக சமுர்த்தி பெறும் குடும்பங்களும் பாடசாலை மாணவர்கள் சிறு தொழில் முயற்சியாளர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பல தரப்பினருக்கு உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்தான் அன்றைய சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தின்போது வடபகுதிக்கு சமுர்த்தித் திட்டம் கொண்டுவரப்பட்டது.   இதன்காரணமாக இன்று பல ஆயிரம் வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்தை மாற்றியமைத்து சேமிப்புகளுடன் கூடியதான சிறப்பாக வாழும் கட்டமைப்பை பெற்றுள்ளனர்.

இந்த சமுர்த்தி திட்டமானது வறிய மக்களை வறுமையிலிருந்து தூக்கி பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கான ஓர் ஏணிப்படியாகவே காணப்படுகின்றது.

இந்த ஏணிப்படியை சரியானதாக பயன்படுத்தி நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை சிறப்பானதாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதுடன் தொடர்ந்தும் இந்த சமுர்த்தி திட்டத்தின் உதவியை நம்பியிருக்காதவர்காளாக வாழும் தகுதியையும் பெற்றுக்கொள்வது அவசியம். அதேபோன்று ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர் உங்களுக்கு கிடைத்த அந்த வரப்பிரசாதத்தை இன்னொருவர் பெறுவதற்கான மனப்பக்குவத்தையும் கொண்டிருப்பது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரசியல்வாதிகளாகிய நாமும் வறிய மக்களை அந்த வறிய நிலையிலிருந்து மீட்கும் செயற்பாடுகளை மேற்கொள்வது அவசியமாகும்.

கடந்த காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்ட 50 ஆயிரம் வீடுகளானாலும் சரி மத்திய அரசிடமிருந்து தமிழ் மக்களுக்காக பெற்றுக் கொடுத்துவரும் அபிவிருத்திகளானாலும் சரி அனைத்தையும் சரியான தெரிவுகளாக அரச இயந்திரங்களின் ஊடாகவே மக்களை சென்றடையச் செய்துவருகின்றார்.

இவற்றில் அவர் தனது அரசியல் அதிகாரங்களையோ அரச அதிகாரிகளிடம் அளுத்தங்களையோ செலுத்தியது கிடையாது. அவ்வாறு தவறுகளும் அளுத்தங்களும் நடைபெறுவதற்கும் அவர் இடங்கொடுத்ததும் கிடையாது. அதனால் அவரது ஒவ்வொரு நலத் திட்டங்களும் தகுதியானவர்களிடம் சென்றடைந்தன.

ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைமை என்ற ஒன்றை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களால் அப்பாவி மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலத்திட்டங்களை எல்லாம் குழறுபடிகளால் தடுக்கப்படுவதுடன் அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தும் கீழ்த்தரமான செயல்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலைக்கு அரச அதிகாரிகளுள் சிலரும் பங்களிப்ப செய்கின்றமை மனவேதனையை தருவதாக தெரிவித்துள்ள பாலகிருஸ்ணன் இந்த நிலை மாற்றப்பட்டு அப்பாவி மக்களின் உரிமைகள் அடிப்படைத் தேவைகள் பாரபட்சங்களொ அரசியல் தலையீடகளோ இன்றி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மல்லைத்தீவு மன்னார் வவுனியா  ஆகிய மாவட்டங்களிலுவும் கறித்த நிகழ்ச்சித்திட்டம் கடந்த முதலாம் திகதிமுதல் இன்று  7 ஆம் திகதிவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் துறைசார் அரச அதிகாரிகளுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்து பயனாளர்களுக்கு உதவி திட்டங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: