விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

Thursday, August 24th, 2023

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்ற விமானமே விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பணிக்குழாமினர் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யுக்ரேனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் படையும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், தமக்கு போரின் போது உரிய ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என கூறி வாக்னர் படை மொஸ்கோவில் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டு பாரிய நெருக்கடியை உருவாக்கியிருந்தது.

இதன் பின்னர், சமரச பேச்சுவார்தையின் மூலம் வாக்னர் படை யுக்ரேனில் ரஷ்ய படையிருடன் இணைந்து தொடர்ந்தும் யுக்ரேன் படைக்கு எதிராக மோதலில் ஈடுபட இணக்கம் தெரிவித்தது. இந்தநிலையிலேயே வாக்னர் படையின் தலைவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்றுடன் நிறைவு!
எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா - இலங்கை மதிப்பாய்வு - அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ...
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை...