ஒபாமாவின் கொள்கையை கடைபிடிக்க போவதாக டிரம்ப் அறிவிப்பு!

Saturday, November 12th, 2016

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஒபாமா அமுல்படுத்திய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கொள்கை அடிப்படை அம்சங்களை அப்படியே கடைபிடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின்போது தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தங்களுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு, அவற்றை ரத்து செய்வதாக டிரம்ப் உறுதிமொழி அளித்திருந்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்கும் முதல் நாளில் மில்லியன்கணக்கான அமெரிக்க ஏழை மக்களுக்கு சுகாதார காப்பீடு பெற அனுமதித்திருக்கும் இந்த சட்டத்தை நீக்குவதாக டிரம்ப் திரும்ப திரும்ப உறுதிமொழி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய பிரசார பேரணிகளில் “ஹிலரியை சிறையில் அடையுங்கள்” என்ற முழக்கத்தை ஊக்குமூட்டிய டிரம்ப், மின்னஞ்சல் விவகாரத்தில் ஹிலரி கிளிண்டனை தண்டிப்பது தன்னுடைய அதிபர் செயல்பாடுகளின் முன்னிலைகளில் முதன்மை பெறவில்லை என்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.மிக சிறந்த போட்டியாளர் என்று ஹிலரியை கூறிய டிரம்ப், அவரை மிக திறமையான பெண் என்றும் புகழ்ந்துள்ளார்.

_92411052_d626280e-bde6-4846-8fee-7116ea034ecd

Related posts: