பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு கருத்து!

Thursday, February 16th, 2017

பிரித்தானியாவின் பிரெக்சிற் நடவடிக்கைகள், அமெரிக்காவின் கொள்கைகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் தேர்தல்கள் ஆகியன, யூரோ வலயத்தை பாதிக்கும் காரணிகளாக உள்ளன என ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மற்றும் நிதி ஆணையர் கருத்து தெரிவித்த போது, “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலக தீர்மானித்துள்ளமை மற்றும் ஏனைய அரசியல் காரணங்களால் ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு எமது பொருளாதாரம் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் தொடர்பான எதிர்வுகூறல்கள் வெளியிடப்பட்டமையின் பின்னர் பிரஸ்சல்ஸில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புவி சார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களுக்கு யூரோ வலயத்தில் உள்ள நாடுகள் முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார். மேற்குறித்த காரணிகளால், யூரோ வலயத்தில் உள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

European Commission 2015 03 04

Related posts: