மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக – மகளிர் தின வாழ்த்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இதனைக் அவர் தெரிவித்துள்ளார்

அந்தவகையில் பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க, முதல் முறையாக தேசிய ஆண் மற்றும் பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயல் திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த பெண்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்

இதேவேளை, தற்போதைய சமூக நெருக்கடிகளின் மத்தியிலும் கூட, பெண்களின் போசனை, சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பெண்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

நாட்டின் அபிவிருத்திக்கு சிறப்பான பங்களிப்பை  ​பெண்கள் வழங்கிய போதிலும், பெரும்பான்மையான     பெண்கள்     இன்னும் வங்கித்     துறையில்      இணையாதுள்ளமை கவலைக்குரியதென, பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

பெண்களின் எதிர்கால நலனுக்காக வங்கி முறைமையில் இணைவதற்கான தடைகளை நீக்குவதில் அரச மற்றும் வர்த்தக வங்கிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இலங்கை சமூகத்தில் பெண்ணுக்கு ஒரு தனித்துவமான இடம் இருந்து வந்துள்ளது. தேசத்தின் பெருமையாக விளங்கிய பெண்கள், அரசாங்கத்திலும், சாசனத்திலும் மற்றும் அரசியலிலும் முன்னணி வகித்தனர் . நெருக்கடி நிலையிலும் உறுதியுடன் செயற்படும் பெண்கள், நாட்டின் பெரும் பலமாக விளங்குகின்றனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 52 வீதமுள்ள பெண்கள், அபிவிருத்தியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். மகளாகவும், மனைவியாகவும், தாயாகவும், பாட்டியாகவும், நாட்டின் பிரஜையாகவும், சமூக சேவகியாகவும் பல,பாத்திரங்களை வெளிப்படுத்தும் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: