பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவுத் தடுப்பு முகாம் அரசியலமைப்பிற்கு முரணானது – நீதிமன்றம் தீர்ப்பு

Wednesday, April 27th, 2016
அகதிகளையும், தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தவிர அனைவரினதும் தனிப்பட்ட சுதந்திரத்தை பப்புவா நியூ கினியின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகின்றது.
கடல்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்கு வெளியே வைத்து விசாரிக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கையின் கீழ் அகதித் தஞ்சக் கோரிக்கையாளர்களை மனுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் வைத்து அவுஸ்திரேலியா பரிசீலித்து வருகிறது.
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதை முடிவிற்கு கொண்டுவர தேவையான நடைமுறைகளை பின்பற்றுமாறு பாப்புவா நியூகினி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அரசாங்கங்களை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
மனுஸ் தீவில் கிட்டத்தட்ட 850 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுனர். அனைவரும் ஆண்கள்.தஞ்சக் கோரிக்கையாளர்களும் அகதிகளும் தாமாக முன்வந்து பப்புவா நியூ கினிவிற்குள் வந்திராத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டினுள் சட்விரோதமாக வந்தவர்கள் என பார்க்க முடியாது என நீதிபதிகள் குழு அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Related posts: