குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும்!

Saturday, July 6th, 2019

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில், குடியுரிமை தொடர்பான கேள்வியை உள்ளீர்ப்பதற்கான வழியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடரும் என, சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பில், நீதிமன்றத்தின் கால அவகாசத்திற்கு அமைய, சட்டத்தரணிகள் விளக்கங்களை வழங்கத் தவறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில், தாம் அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளவரா? என்ற கேள்வியை உள்ளீர்ப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாக நடவடிக்கை மேற்கொண்டது.

எனினும், குறித்த கேள்வியானது, புலம்பெயர்ந்தோரின் ஊக்கப்படுத்தல்களை நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து அமெரிக்க உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த கேள்வியை மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ளீர்க்க தொடர்ந்தும் முயற்சிப்பதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: