உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது – தெரேசா மே!

Tuesday, April 25th, 2017

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெறுமாயின், வெளிநாட்டு உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் கடந்த வியாழக்கிழமை மேற்கு லண்டனில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள மே, தேசிய வருமானத்தில் 0.7 சதவீதத்தை உதவித் திட்டங்களுக்காக பயன்படுத்துவதில் எதுவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.தேசிய வருமானம் மிகவும் பயனுள்ள வழியிலேயே பயன்படுத்தப்பட வேண்டும் எனும் கட்டாய நிலையில் பிரித்தானியா உள்ள போதும், உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படாது என மே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு மேயினால் வெளியிடப்படவுள்ள ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நிரலில் உதவித் திட்ட நிதியில் குறைப்பு ஏற்படுத்தப்படவுள்ளதென்ற கருத்து பரவ ஆரம்பித்ததை தொடர்ந்தே மே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்

Related posts: