2 மணிநேரத்தில் பெய்ஜிங்கிலிருந்து  நியூயார்க்குக்கு செல்லலாம்!  

Monday, February 26th, 2018

பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக இரண்டு மணி நேரத்தில் பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது.

தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13 மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும் என இதை வடிவமைத்த சீனஅறிவியல் அகாடமியின் குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது அது மணிக்கு 8,600 கி.மீ. வேக திறனுடன் பறந்தது.

இந்த விமான பயணத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். பெய்ஜிங்-நியூயார்க் செல்ல ரூ.16 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts: