இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி  இடையில் சந்திப்பு!

Tuesday, June 27th, 2017

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பும் முதல் தடவையாக சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் , குடிவரவு செயற்பாடுகள் மற்றும் பரிஸ் காலநிலை மாநாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் வெள்ளைமாளிகை விருந்துபசாரத்தில் கௌரவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச தலைவராக மோடி பதிவாகியுள்ளார். அமெரிக்க மற்றும் இந்தியவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியுள்ளதுடன் போர் தளவாடக் கொள்வனவுகள் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் கவனத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை Boeing C-17 விமானத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.இந்த Boeing C-17 விமானத்தின் பெறுமதி 366 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.2014 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதன் பின்னர் ஐந்தாவது தடவையாக அமெரிக்காவிற்கான விஜயத்தில் மோடி ஈடுபட்டுள்ளார்.

Related posts: