துருக்கி இராணுவ புரட்சி: கனேடிய மதகுரு ஒருவர் கைது!

Thursday, August 11th, 2016

கனடாவை சேர்ந்த மதகுரு ஒருவர் துருக்கியில் நடைபெற்ற இராணுவ புரட்சியில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

கல்கேரியில் வசித்து வந்த Hanci என்பவர், துருக்கியின் Trabzon நகரில் வசித்து வந்த தனது நோய்வாய்ப்பட்ட தந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் துருக்கி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் யூலை 16 ஆம் திகதி துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஆட்சிக்கு எதிராக, இராணுவ புரட்சி நடத்தப்பட்டது, இந்த புரட்சி அந்நாட்டு பொலிசார் மற்றும் பொதுமக்களால் முறியடிக்கப்பட்ட போதிலும், 270 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட்ட இராணுவவீரர்களும் கைது செய்யப்பட்டனர், இவர்களில் கல்கேரியை சேர்ந்த Hanci – யும் அடங்குவார். இவரும், இராணுவபுரட்சியில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக அந்நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், தனது கணவரின் நிலை அறியாது தவித்த மனைவி Rumeysa, காவல் நிலையம் சென்று பொலிசாரிடம் விசாரித்துள்ளார்.

உங்கள் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற பதிலே Rumeysa- வுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து காவல் நிலையம் சென்று தனது கணவர் குறித்து விசாரித்துக்கொண்டிருந்த Rumeysa, ஒரு வாரத்திற்கு பின்னர் தனது கணவருடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. Hanci தான் நலமாக இருப்பதாக மட்டும் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இவரை விடுவிப்பதற்காக வழக்கறிஞர்களை தொடர்பு கொண்ட போதும், உதவி செய்தவற்கு யாரும் முன்வரவில்லை. தற்போது தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பத்திரமாக கனடாவுக்கு திரும்பியுள்ள Rumeysa, தனது கணவரை விடுவிப்பதற்கு கனடிய அரசாங்கம் எப்படியாவது உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.கல்கேரியில் சிறைக்கைதிகளுக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கும் பணியினை Hanci செய்து வருகிறார், ஒரு சாதாரண குடிமகனாக இருக்கும் இவர், எவ்வாறு இதுபோன்று ஆயிரக்கணக்கான இராணுவவீரர்களை திரட்டி புரட்சியில் ஈடுபட முடியும் என இவர்களது குடும்ப நண்பர் Malik Muradov கூறியுள்ளார்.

Related posts: