பிக் பென் பராமரிப்பு செலவு இருமடங்காக உயர்வு!

Monday, October 2nd, 2017

பிக் பென் மணிக் கூண்டை பராமரிக்கும் செலவானது இருமடங்காக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மணிக்கூண்டு பிக் பென். 150 வருடங்கள் பழைமையான பிக் பென் மணிக்கூட்டுக் கோபுரத்தில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் வேலைகளுக்காக அதிலுள்ள மணிக்கூண்டு எதிர்வரும் 4 வருட காலத்திற்கு ஒலிக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இதன் பராமரிக்கு செலவானது கடந்த ஆண்டை விடவும் 32 மில்லியன் பவுண்டு அதிகமாக செலவாகும் என தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு இதன் பராமரிப்பு செலவினங்களுக்காக 29 மில்லியன் பவுண்டு தேவைப்படும் என கணக்கிடப்பட்டது.

மட்டுமின்றி பிக் பென் பராமரிப்பு பணிகளை தாமதமின்றி துவங்க உள்ளதாகவும், திட்டமிடப்பட்டதை விடவும் இது கடினமான பணியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டில் எலிஸபெத் மகாராணியாரைக் கௌரவப்படுத்தும் வகையில் எலிஸபெத் கோபுரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த மணிக்கூண்டுக் கோபுரமானது 1859 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்­ரு மணிநேரத்துக்கும் ஒலித்து வருகிறது.நான்கு பக்கங்கள் கொண்ட மணிக்கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.

Related posts: