அமெரிக்க – தென்கொரிய இராணுவங்களின் கூட்டு பயிற்சி நிறுத்தம்!

Monday, June 18th, 2018

அமெரிக்கா மற்றும் தென்கொரிய இராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளவிருந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய அளவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பை இரு நாடுகளும் இணைந்து வெளியிடும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் யுன்னை சிங்கப்பூரில் சந்தித்து உரையாடிய பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் இராணுவ பயிற்சி அல்லாத ஏனைய நடவடிக்கைகள் அமெரிக்க, தென்கொரிய தரப்பினரால் இணைந்து தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 1953 ஆம் ஆண்டு கொரிய யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தென்கொரியாவில் அமெரிக்க துருப்பினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர். தற்போது அங்கு 28 ஆயிரத்து 500 அமெரிக்க படைத்தரப்பினர் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: