அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக பிரித்தானியாவுக்கு ஏற்றுமதியாகும் ஷேல் பாறை எரிவாயு!

Tuesday, September 27th, 2016

அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் , ஷேல் காஸ் எனப்படும் பாறை எரிவாயு ஸ்காட்லாந்திற்கு இன்று வரவுள்ளது.

பாறைகளை குடைந்து அதில் சிக்கியிருக்கும் எரிவாயுவை உறிஞ்சி எடுக்கும் ‘பிராக்கிங்’ எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இந்த எரிவாயு பிரித்தெடுக்கப்படுகிறது.

‘முன்னேற்றத்திற்காக ஷேல் எரிவாயு’ என்ற வாக்கியம் பொறிக்கப்பட்ட ஒரு கப்பலில் , கப்பலின் முன் பகுதியில், பேக்பைபர் என்ற இசை வாத்தியம் ஒலி முழங்க ,

இந்த எரிவாயுவை ஸ்காட்லாந்தின் கிரேன்ஜ்மௌத் துறைமுகத்திற்கு ரசாயன தொழில் பெரு நிறுவனமான ஐ.என்.இ.ஓ.எஸ். (Ineos), கொண்டுவருகிறது.

ஸ்காட்லாந்து அரசு ஃபிராக்கிங் தொழில்நுட்பத்தை தற்போது தடை செய்துள்ளது. இந்த முறையில் தண்ணீர், மணல் மற்றும் ரசாயனம் ஆகியவை அதிக அழுத்தத்தில் ஷேல் பாறைகளில் செலுத்தி எரிவாயு எடுக்கப்படுகிறது.

ஸ்காட்லாந்து கடற்கரைக்கப்பால், வட கடலில் இருந்து கிடைக்கும் எரிவாயு குறைந்து வருவதால், அதற்கு பதிலாக , ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த எரிவாயு தயாரிப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும்து.

_91398129_port

Related posts: