பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள அமெரிக்கா உதவும் – தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!
Thursday, March 2nd, 2023
இலங்கை நெருக்கடியான நிலையிலிருந்து மீளும் வரை, அமெரிக்கா துணை நிற்குமென அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்த வகையில் இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு அமெரிக்கா துணை நிற்குமென்றார்.
இவ்வைபவத்தில், அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!
ஜூலியன் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை நிறைவுக்கு வருகின்றது?
MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெற அமைச்சரவை அனுமதி!
|
|
|


