MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெற அமைச்சரவை அனுமதி!

Wednesday, January 11th, 2023

MV X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் இலங்கையில் பாரிய கடல் சுற்றாடல் அழிவை ஏற்படுத்திய கப்பலின் உரிமையாளரான காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க டொலர்களில் இழப்பீடு பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை நாணயத்தில் இழப்பீடு பெறுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என்பதால், கடற்கரையை சுத்தப்படுத்துதல், கழிவு முகாமைத்துவம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பிற நடவடிக்கைகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க டொலரில் இழப்பீடு பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அமெரிக்க டொலரில் MV X-Press Pearl கப்பலின் காப்பீட்டு நிறுவனத்திடம் காப்பீட்டு கோரிக்கை படிவத்தை சமர்ப்பிக்கவுள்ளது.

கப்பலின் உரிமையாளரான காப்புறுதி நிறுவனம் திறைசேரியுடனான முதல் மற்றும் இரண்டாவது கோரிக்கைகளை முழுவதுமாக அமெரிக்க டொலர்களில் செலுத்திய போதிலும், காப்புறுதி நிறுவனம் MEPA ஊடாக மூன்றாவது மற்றும் நான்காவது கோரிக்கைத் தீர்வை அமெரிக்க டொலர்கள் மற்றும் ரூபாய் செலுத்துமாறு கோரியுள்ளதாக நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. .

சிங்கப்பூரின் கொடியுடன் பொருட்களை ஏற்றிய MV X-Press Pearl, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் தீ விபத்து ஏற்பட்டதுடன், பின்னர் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: