மக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல – பல்லசுட்டியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன் !

Monday, July 16th, 2018

எமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை இனியும் தொடராதிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அந்தவகையில் மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவேண்டும் என்பதை முன்னிறுத்தியே நாம் தொடர்ந்தும் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை  உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பல்லசுட்டி காந்திஜீ  கலையரங்கம் திறப்பு விழாவும், காந்திஜீ விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்த பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது கட்சி என்றுமே சுயநலம் கருதியதாக எந்தவொரு செயற்பாட்டையும் செய்தது கிடையாது. மக்களுக்கு எது தேவைப்படுகின்றதோ அதை உடனுக்குடன் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதே எமது செயற்பாடாக உள்ளது.

கடந்தகாலங்களில் எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகவும் மிகச் சிறந்தமுறையில் பயன்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளார்.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஓடி ஒழித்தவர்கள் எல்லோரும் இன்று வந்து நாம் ஆரம்பித்து வைத்தவற்றை திறந்து தமது பெயர் பதிக்கப்படவேண்டும் என அடம்பிடிப்பதானது வேடிக்கையாக உள்ளது.

வடபகுதியை பொறுத்தளவில் எமது கட்சியின் செயலாளர் நாயகத்தின் கரங்கள் பட்டு அபிவிருத்தி கண்ட பிரதேசங்களே அனைத்தும். ஆனால் அவற்றையெல்லாம் நாம் பெயருக்காகவும் புகழுக்காகவும் ஒருபோதும் பயன்படுத்தியது கிடையாது.

எமது மக்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதான அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி மன்றங்கள் தற்போது இயங்கு நிலையில் உள்ளன. இவற்றின் ஆட்சி அதிகாரங்கள் பல கட்சிகளின் கூட்டாக இருக்கின்றபோதிலும் அவர்கள் அனைவரும் இப்பிரதேச மக்களின் பிரதி நிதிகள் என்றதன் அடிப்படையில் மக்கள் சேவைகளை செய்ய முன்வரவேண்டும்.

அவ்வாறான ஒரு சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் எமது பிரதேசங்களின் அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்களையும் விரைவாக காணமுடியும்.

அந்தவகையில் தொடர்ந்தும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கும் இடங்கொடுக்காது உண்மையானதும் நியாயமானதுமான கருத்ததுக்களுக்கு செவிகொடுத்து எதிர்காலங்களில் மக்களுக்கு பணிசெய்யும் அரசியல் தலைமைகளை நிர்ணயிப்பதே காலத்தின் அவசியமாகின்றது.

எனவே எமது மக்கள் சேவையை மேலும் அதிகளாவாக நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களாகிய உங்களது அதரவும் எம்மை நோக்கி மேலும் அதிகரித்ததாக இருக்கவேண்டும். கடந்த காலத்தில் நாம் இப்பிரதேசத்திற்கு பல்வேறுவகையான வாழ்வாதார உதவித்திட்டங்களையும் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட கட்டுமாணப் பணிகளையும் பெற்றுக்கொடுத்து மக்களின் வாழ்வியல் நிலையில் மாற்றத்தை உருவாக்கி காட்டியிருக்கின்றோம்.

அந்தவகையில் மக்கள் எமது கரங்களுக்கு அதிகரித்த அரசியல் பலத்தை தரும் பட்சத்தில் இப்பிரதேசம் நிச்சயமாக அபிவிருத்தியால் வெற்றிகொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: