மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் !
Monday, February 21st, 2022
நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.
இதற்கான அறிவுறுத்தல் இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர் தரப்பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நீண்டகால விசா - அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அம...
வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு சென்ற அரச அதிகாரிகள் மீண்டும் பணிக்குத் திரும்பவில்லை என குற்றச்சாட்டு!
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது ஸ்பெயின் - மிகப் பெரிய அழுத்தத்தில் இஸ்ரேல்!
|
|
|


