சிங்கப்பூரில் பங்களாதேஷத்தை சேர்ந்த நால்வரக்கு சிறை!

Wednesday, July 13th, 2016

சிங்கப்பூரில் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி திரட்டியதுடன் பங்களாதேஷ் அரசைகவிழ்க்கவும் முயற்சித்ததாக பங்களாதேஷ்த்தை சேர்ந்த சிலர் சிக்கினர்.

இது தொடர்பாக 6 பேர் மீது நீதிமன்றத்தில் பயங்கரவாத (நிதி மறைப்பு) சட்டத்தின்கீழ்வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் நடந்த முதல்வழக்கும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நிதி திரட்டிய குழு தலைவரான ரகுமான் மிசானுருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டது. அவரது நண்பர் சொஹேல் ஹாவ்லதருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை இமியா ரூபேலுக்கும் முகமது ஜப்பாத் கைசாருக்கும் தலா 2½ ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

ஜமான் தவுலத் மாமுன் லியாகத் அலி என்னும் 2 பேர் மீதான வழக்கு விசாரணைதொடர்கிறது. பங்களாதேசத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் அரசை நிறுவுவது தான் 6 பேரின் முக்கியநோக்கமாக இருந்துள்ளதாக வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: