தென் சீனக் கடலில் கூட்டு இராணுவ பயிற்சி இடைநிறுத்தம்: பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ!

Saturday, October 8th, 2016

தென் சீன கடல் பகுதியில் மேற்கொண்டிருந்த கூட்டு இராணுவ பயிற்சிகளை இடைநிறுத்தி கொள்வதாக அமெரிக்காவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.

இது உறுதியாகும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மிகப்பெரிய மாற்றத்தை இது குறித்துகாட்டும்.அதிபராக ரொட்ரிகோ டுடெர்டோ பதவியேற்பதற்குமுன், இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து வந்தது.

அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருப்பதை தான் விரும்பவில்லை என அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபரின் ஆட்சிக்காலத்தில், வளர்ந்து வந்த சீன ஆதிக்கத்தை சமாளிக்கும் விதமாக அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பை பிலிப்பைன்ஸ் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

_91560271_34aca835-29f7-4785-b1fb-270565236814

Related posts: