குற்றவாளியை தண்டிக்க சாதாரண மனிதருக்கு உரிமை உண்டு –  ஹரியானா பொலிஸ் அதிரடி கருத்து?

Friday, May 27th, 2016

பெண்ணை அவமதித்தாலோ அல்லது ஒரு நபரை கொலை செய்ய முயன்றாலோ அந்த செயலை செய்ய முயலும் குற்றவாளியின் உயிரை எடுக்க, சாதாரண மனிதருக்கு உரிமை உள்ளது என ஹரியானா பொலிஸ் டைரக்டர் ஜெனரல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் கடந்த புதன்கிழமையன்று, திருமண விழா கொண்டாட்டம் ஒன்றின் போது பெண் ஒருவர் அவமதிக்கப்பட்டதாகவும் இதனால் எழுந்த மோதலில் இரண்டுக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹரியானா பொலிஸ் டைரக்டர் ஜெனரல், யாராவது பெண்ணை அவமதித்தாலோ அல்லது ஒரு நபரை கொலை செய்ய முயன்றாலோ அந்த செயலை செய்ய முயலும் குற்றவாளியின் உயிரை எடுக்க, சாதாரண மனிதருக்கு உரிமை உள்ளது என பேசியுள்ளார்.

மேலும், யாராவது ஒருவர் பிறரின் வீட்டுக்கு தீ வைத்தால், அந்த தீ வைத்த நபரை, ’சாதாரண நபர்’ கொலை செய்ய சட்டம் உரிமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பொலிசார் ஏற்கனவே இங்கு உள்ளனர்.

சமுதாயத்தில் சாதாரண மனிதனாக இருக்கும் நீங்கள் உங்களது பங்கினை புரிந்து கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: