தமிழக சட்டசபை தேர்தல் – காலை 9 மணி வரை 18.3% வாக்குப் பதிவு!

Monday, May 16th, 2016
தமிழக சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படும். அதேபோல் மாலை 3 மணிக்கு பிறகு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நிலவரம் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், காலை 9 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 18.3 சதவீதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. அதேபோல் மாவட்ட வாரியாகவும் தேர்தல் வாக்குப் பதிவு சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 13 சதவீதமும், கடலூரில் 15 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதேபோல் ஈரோடு 18 சதவீதம், கோவையில் 6 சதவீதம், திருவள்ளூரில் 9.9 சதவீதம், திருவாரூரில் 5 சதவீதம், நெல்லை 10 சதவீதம், காஞ்சிபுரம் 11 சதவீதம், விருதுநகர் 12 சதவீதம், ராமநாதபுரம் 3 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது.

இதனிடையே கேரளாவில் 13.5 சதவீதமும், புதுச்சேரியில் 10.34 சதவீதமும் பதிவாகியுள்ளது

Related posts: