அதிகார ஒப்படைப்பு பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கலந்துரையாடல்!

Saturday, November 19th, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு நடைபெறுகின்ற தங்களின் முதல் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளனர்.

பெர்லினில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்றார். உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல் ஃபிளின்னை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் நியமித்திருக்கிறார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவை எதிர்த்து போராடும் ஒபாமாவின் அணுகுமுறை குறித்தும் ஃபிளின் கடுமையாக விமர்சித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

_92511649_c68a4824-d3dd-4ac0-b552-2006573e36bb

Related posts: