பாகிஸ்தானும் இலங்கையாக மாறும் – எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!
Wednesday, May 25th, 2022
இலங்கையைப் போன்றதொரு நிலைமையை நோக்கி பாகிஸ்தான் சென்றுகொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
தனது கட்சியின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தற்போதைய அரசாங்கம் அதை அழித்துவிட்டது, டொலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் வீழ்ச்சியானது விலை உயர்வாக உள்ளது.
எனவே நாட்டில் உடனடித் தேர்தலே ஒரே தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் அடிமை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக இம்ரான் கான் கைது செய்யப்பட்டால், பாகிஸ்தான், இலங்கையாக மாறும் என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ரஷீட் அஹமட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரஷ்ய போர் கப்பலுக்கு ஸ்பெயின் தடங்கல்!
நைஜீரியாவில் 80 ஆயிரம் குழந்தைகள் பட்டினியால் சாகும் நிலை!
தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..
|
|
|


