வெங்கையா நாயுடுவின் கருத்தால் சர்ச்சை!

Monday, June 26th, 2017

ஹிந்தி மொழி எமது அடையாளம் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறிய கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமைச்சர்களும்  எழுதும்போதும் பேசும்போதும் ஹிந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ஹிந்தி மொழிக்கு ஆதரவாக வெங்கையா நாயுடு நேற்று மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பேசியிருக்கிறார்“ஹிந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தங்களை வளைத்துக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது.

நமது தாய்மொழியை கற்றுக்கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். அதே நேரம் ஹிந்தி கற்றுக் கொள்ளவேண்டும். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடைபெறவேண்டும்” என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.குறித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஹிந்தியை கட்டாயமாக திணிக்கிறது என்று ஹிந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் கட்சி தலைவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related posts: