பெல்ஜியத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ள கப்பலில் மூவர் மரணம்!

Friday, March 13th, 2020

பெல்ஜியம் ஜீப்ரக் துறைமுகத்தில் நேற்றுமுதல் இந்தக் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் தடையை வெஸ்ற் ஃபிளன்டர்ஸ் மாகாண ஆளுநர் கார்ல் டெக்கலுவே விதித்துள்ளார்.

பெல்ஜியத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் கப்பல் ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெல்ஜியத்தில் நேற்று கொரோனா வைரஸால் 3 பேர் உயிரிழந்த நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த கப்பலில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையிலேயே கப்பல் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.

இத்தாலிக்குச் சொந்தமான குறித்த கப்பலில், சுமார் 2,500 பயணிகள் மற்றும் 640 பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கார்னிவல் கோர்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான லைனர் என்ற இந்தக் கப்பல், ஹம்பேர்க், சௌத்தம்ரன், லி ஹவ்ரே, ஜீப்ரக்ஜ் மற்றும் ரோட்டர்டாம் ஆகிய இடங்களில் ஏழு நாட்கள் பயணத்தை மேற்கொள்கிறது. பெரும்பாலும் ஜெர்மனியைச் சேர்ந்த பயணிகள் இக்கப்பலில் உள்ளனர்.

இதேவேளை, பெல்ஜியத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் சோஃபி வில்ம்ஸின், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மக்கள் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்துள்ளதுடன் அந்நாட்டு சுகாதாரத்துறை கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

பெல்ஜியத்தில் இப்போதைய நிலைவரப்படி 314 பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: