103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்!

Tuesday, December 26th, 2017

முதலாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் தொலைந்துபோன அவுஸ்திரேலியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் 103 ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எச்.எம்.ஏ.எஸ் ஏ.இ-1 என்று பெயரிடப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பல்தான் அப்போரில் பங்கேற்ற நேச நாடுகள் தரப்பில் தொலைத்த முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.

பப்புவா நியூ கினியாவின் ரபால் அருகே உள்ள கடல் பரப்பில் 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 35 அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் படையினருடன் அது காணாமல் போனது.

பப்புவா நியூ கினியாவில் உள்ள டியூக் ஆப் யார்க் தீவு அருகே அவுஸ்திரேலியாவின் 13-வது அது தேடல் குழுவால் இக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவுஸ்திரேலியாவின் மிகவும் பழமையான கடற்படை புதிர் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

அவுஸ்திரேலிய கடற்படை வரலாற்றில் இது முக்கியமானது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மாரிஸ் பெய்ன் கூறியுள்ளார்.

கடலின் அடிப் பரப்பில் இருந்து 40 மீட்டருக்கு மேல், கடலுக்கு அடியில் தேடும் டுடிரோன்டு மூலம் இந்த சிதைவுகளை தேடல் குழு கண்டு பிடித்தது.

காணாமல் போன கப்பலில் இருந்தவர்களின் வாரிசுகளை தொடர்பு கொள்ளவும் அங்கு நினைவு அமைக்கவும் பப்புவா நியூ கினியா அரசை ஆஸ்திரேலிய அரசு தொடர்புகொள்ளவுள்ளது.

அந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாக்கும் நோக்கில் அதன் துல்லியமான இடம் எதுவென்று தெரிவிக்கப்படவில்லை. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் 12 தேடல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

Related posts: