புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது – பாதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Thursday, February 10th, 2022
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் கூறுகையில் – ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான் கடைசி கொரோனா வகையாக இருக்காது. மேலும் நான்கு உருமாறிய கொரோனா தொற்று குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது இவை உருமாற்றம் அடைவதால் இதுகுறித்த முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனாவால் இதுவரை கொரோனா வகைகளில் இல்லாத அளவுக்கு பரவல் வேகமும், பாதிப்பும் அதிகமாக இருக்கும்.
ஆகையால், கொரோனா தடுப்பூசி செலுத்தலை துரிதப்படுத்தி, அந்த புதிய வகையின் பரவல் வேகத்தை குறைக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
அமெரிக்காவின் சிம்ம சொற்பனம் ஃபிடல் காஸ்ட்ரோ அமைதியடைந்தார்!
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!
மேல் மாகாணத்தில் 80 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் - கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!
|
|
|
உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அரைவாசியாகும் - சட்டத்தில் திருத்தம் வரும் என்கிறார் ஜனாதிபதி!
மர்ம நபர்களால் கடற்றொழில் படகு தீயிட்டு எரிப்பு; சம்பவத்தை ஈ.பி.டி.பி முக்கியஸ்ர்கள் நேரில் சென்று ...
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக...


