மர்ம நபர்களால் கடற்றொழில் படகு தீயிட்டு எரிப்பு; சம்பவத்தை  ஈ.பி.டி.பி முக்கியஸ்ர்கள் நேரில் சென்று ஆராய்வு!

Monday, July 23rd, 2018

கட்டைக்காட்டுப் பகுதியில் தீயிட்டு கொழுத்தப்பட்ட கடற்றொழில் படகு  அதன் இயந்திரம் மற்றும் வலைகள் என்பற்றை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச முக்கியஸ்தர்கள்  நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.

நேற்றுமுன்தினம் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான குறித்த படகு இனம் தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டதால் படகும் கடற்றொலில் உபகரணங்களும் எரிந்து முற்றாக நாசமாகின.

இந்த தீயூட்டலுக்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாதுள்ள நிலையில் குறித்த படகின் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபாவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மர்ம நபர்களால் எரியூட்டப்பட்ட குறித்த படகை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை செபஸ்தியன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாகச் செயலாளர் கணேசமூர்த்தி விசிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து கொண்டதுடன் சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான செபமாலை சுஜீபனை சந்தித்த அவருக்கு ஆறுதலை தெரிவித்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று சம்பவம் தொடர்பான காரணத்தை துறைசார் தரப்பினரூடாக கண்டறிந்து குறித்த விரோதச் செயலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வதுடன் நஷ்டடு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: