ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Wednesday, April 21st, 2021

ஏப்ரல் 21  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உறுதியளித்தார். நாடாளுமன்றத்தல் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் ஏப்ரல் 21   தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் சட்டமா அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்த பிரதமர் இது குறித்து சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க அரசாங்கம் தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவியல் புலனாய்வுத்துறை மற்றும் ஏனைய புலனாய்வு அமைப்புகள் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு சுயாதீனமான முறையில் செயற்பட ஜனாதிபதி உதவியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்கள், தனித்தனியான விசாரணைகளை முடித்தவுடன் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

தேசிய பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக தேசத்திற்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் அப்பாவி பொதுமக்கள் அதற்கு விலை போயுள்ளனர் என்றும்  தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச,  கடந்த அரசாங்கத்தின் சில குழுக்கள் தவறான தகவல்களுடன் தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் ஏப்ரல் 21  தாக்குதல்களுக்கு ஒத்த சம்பவங்கள் மீண்டும் நாட்டில் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் நம்பிக்கை வெளியிட்ட பிரதமர் 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: