மலேசிய மாலுமிகள் 4 பேர் துப்பாக்கிதாரிகளால் கடத்தல்!

மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் வைத்து மலேசிய மாலுமிகள் நான்கு பேரை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
அந்தக் கடல் பகுதியில் இஸ்லாமிய வாத தீவிரவாதிகள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்றவாரம் அக்கடற்பகுதியில் விசைப்படகு ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த 10 இந்தோனேசிய பிரஜைகள், அபு சயீஃப் என அழைக்கப்படும் பிலிப்பைன்ஸ் இஸ்லாமியவாதக் குழுவால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர்.
அந்த இந்தோனேசியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என தீவிரவாதிகள் கோருகின்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவம் மலேசிய கடல்பகுதியிலா அல்லது சர்வதேச கடல் எல்லையிலா இடம்பெற்றது என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது
Related posts:
மரண தண்டனை சட்டத்தை கொண்டுவருகின்றது துருக்கி?
ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் !
துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை - ட்ரம்ப்!
|
|