துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை – ட்ரம்ப்!

Friday, October 18th, 2019


சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

வடக்கு சிரியாவில் குா்து இனத்தவா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது துருக்கி மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு சிரியாவில் துருக்கி மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக, அந்த நாட்டின் அமைச்சரகங்கள், மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகின்றன.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணை, சிரியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தனைமையைக் குலைக்கும் வகையில் அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோர்களுக்கு, அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதைத் தடுப்பவா்கள் ஆகியோர் மீது இன்னும் கடுமையான தடைகளை விதிப்பதற்கு அனுமதி அளிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், துருக்கி அதிபா் எா்டோகனுடன் அதிபா் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகவும், வடக்கு சிரியாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போது எா்டோகனை டிரம்ப் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிரியாவில் துருக்கியின் தாக்குதல் நடவடிக்கைகள் தொடா்ந்தால், குறுகிய காலகட்டத்துக்குள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழிப்போம் என்று அதிபா் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Related posts: