நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்: சாதனை படைத்த ஸ்டோனிஸ்!

Wednesday, February 1st, 2017

ஒருநாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் அடித்ததுடன், 3 விக்கெட்டும் வீழ்த்திய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டோனிஸ் தனதாக்கினார்.

அவுஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.

287 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

6-வது விக்கெட்டுக்கு களம் கண்ட மார்கஸ் ஸ்டோனிஸ் நிலைத்து நின்று அடித்து ஆடி சதம் கண்டார். 2-வது ஒருநாள் போட்டியில் ஆடிய அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

மார்கஸ் ஸ்டோனிஸ் நங்கூரம் பாய்த்தது போல் நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவருடன் இணைந்தவர்கள் யாரும் தாக்குப்பிடித்து விளையாட முடியாமல் விக்கெட்டை இழந்ததால் அவரால் அணியை கரை சேர்க்க முடியவில்லை.

* ஒருநாள் போட்டியில் 7-வது வீரராக களம் இறங்கி அதிக ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலிய வீரர், உலக அளவில் 2-வது வீரர் என்ற பெருமையை மார்கஸ் ஸ்டோனிஸ் (ஆட்டம் இழக்காமல் 146 ஓட்டங்கள்) பெற்றார். இந்த வகையில் நியூசிலாந்து வீரர் லுக் ரோஞ்ச் ஆட்டம் இழக்காமல் 170 ஓட்டங்கள் (2015-ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக) எடுத்ததே சாதனையாக உள்ளது.

* ஒருநாள் போட்டியில் ஒரு ஆட்டத்தில் சதம் அடித்ததுடன், 3 விக்கெட்டும் வீழ்த்திய முதல் அஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்டோனிஸ் தனதாக்கினார். அவுஸ்திரேலிய வீரர்களில் சைமண்ட்ஸ், ஷேன் வொட்சன் ஆகியோர் ஒரு சதத்துடன் 2 விக்கெட் வீழ்த்தியதே சிறந்ததாக இருந்தது.

*இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி கடைசி 4 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் திரட்டியது. ஒருநாள் போட்டியில் சேசிங் செய்கையில் ஒரு அணி இந்த வகையில் சேர்த்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

25col8558140909107_5178049_31012017_AFF_CMY

Related posts: