‘டவ் தே’ அதிதீவிர புயலாக வலுப்பெற்றது!

Sunday, May 16th, 2021

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம்  அறிவித்துள்ளது.

டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 730 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. 12 மணிநேரத்திற்குள் இது, புயல் வலுப்பெற்று, நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டவ் தே புயல் வரும் செவ்வாயன்று குஜராத்தில் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன் 5 மாநிலங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50க்கு மேற்பட்ட பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களில் கேரளா, கர்நாடகா, கோவாவில் கடலோர பகுதிகளில் பெரு மழை பொழிந்து நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts: