திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, January 18th, 2023
திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரலாற்றில் முதல்தடவையாக அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு உரிய திகதியில் மாதாந்த வேதனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி நிதியம் இருப்பதன் காரணமாக சமுர்த்தி கொடுப்பனவை அரசாங்கம் தாமதிக்க முடியாது என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாடாளுமன்றில் கோப் குழுவின் விசேட கூட்டம் - எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!
புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் - 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கை...
|
|
|


