2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!

Tuesday, September 26th, 2023

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல வரைவுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும் – சாதித்துக் காட்டுவார் டக்ளஸ் தேவானந்தா என்கிறார் இரா. செல்வவட...
இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வீதிக் கட்டமைப்பின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை - நெடுஞ்சால...
பொலிஸ் மா அதிபர் பதவிக் காலத்தை நிர்ணயிக்க புதிய சட்டம் - கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கம் தெரிவிப்...