துறைமுக பணியாளர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!
Thursday, July 27th, 2017
அகில இலங்கை துறைமுக பணியாளர்கள் சங்கம் நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிதத்துள்ளது.
இதனை இன்று அறிவித்துள்ளது.முன்னதாக, ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள இந்த சங்கம் தீர்மானித்திருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அனுமதி கோரும் ஒப்பந்தத்தை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், நாளைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு இரத்துச்செய்யப்பட்டுள்ளது
Related posts:
2017 - 2018 பல்கலைக்கழக கற்கைக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்!
500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் இன்று இலங்கை வந்தடையும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை - அடையாள அணிவகுப்பில் - 4 பொலிஸாரை அடையாளம் காட்டினார் பிரதான சாட்சி!
|
|
|


