2017 – 2018 பல்கலைக்கழக கற்கைக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்!

Tuesday, January 16th, 2018

2017 – 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமானவெட்டுபுள்ளிகளை அறிவிப்பதற்கு மேலும் 3 மாத காலமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வாதெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவுடன்  இவ் விண்ணப்பத்துக்கான கால எல்லை நிறைவடைவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள்ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கு இணையத்தளத்தின் ஊடாகவே விண்ணப்பிக்க முடியும்.

களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிதிக் கற்கைகள் தொடர்பான கற்கைநெறி ஒன்று இம்முறை புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாகசப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் வைத்திய விஞ்ஞான கற்கை நெறி ஆரம்பிக்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீட கற்கைநெறிக்காக 75 மாணவர்களும், வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 75 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இந்தக்கல்வி ஆண்டுக்காக வைத்திய பீட கற்கைநெறிக்கு 1470 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த வருடத்திலும் பார்க்க இம்முறை 160 மாணவர்கள் மேலதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வாகுறிப்பிட்டுள்ளார்.

கற்கை நெறியைத் தெரிவு செய்யும் போது அல்லது ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அது தொடர்பாகபல்கலைக்கழகங்கள் மானியஆணைக்குழுவிடம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியும்.

Related posts: