உலகின் அதிக வேக புகையிரதத்தை அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்த சீனா திட்டம்!

Tuesday, August 9th, 2016

உலகிலேயே அதிவேகமான ரயில் சேவை அடுத்த மாதம் சீனாவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ரயிலானது சுமார் 380 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள செங்ஷோவ் நகர் மற்றும் கிழக்கு சீனாவில் உள்ள ஜூஷோவ் மாகாணத்திற்கு இடையே இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

இதன் மூலம் இந்த மாகாணங்களுக்கு செல்வதற்காக முந்தைய இரண்டரை மணிநேர பயணம் இனி 80 நிமிடங்களாக குறைந்து விடும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டத்தின்போது இந்த ரயிலானது 400 கிலோ மீட்டர் என அதன் உச்சக்கட்ட வேகத்தில் இயக்கப்பட்டதாம்.

அதிவேக ரயில்களின் இயக்கத்துக்காக சுமார் 16000 கிலோமீட்டர் நீளம் கொண்ட தண்டவாள வழிதடத்தை சீனா அமைத்துள்ளது.இந்தப் பாதை வழியாக நடைபெற்ற ரயில் போக்குவரத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சீனாவிற்கு 100 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வகையிலான அதிவேக ரயில்களை உலகின் மற்ற நாடுகளுக்கும் சந்தை படுத்த சீனா திட்டமிட்டுள்ளது

Related posts: