கொரோனா மீண்டும் வரலாம் – ஆய்வில் வெளியான தகவல்!

Monday, June 22nd, 2020

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் முடிவுக்கு வந்த பிறகும், பருவகால மாற்றங்களின்போது அந்த நோய்த்தொற்று அவ்வப்போது பரவலாம் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, மார்ஷல் பல்கலைக்கழத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ள ஆய்வின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெப்பம் மிகுந்த சூழலிலும், ஈரப்பதம் அதிகம் உள்ள நிலையிலும் கொரோனா தீநுண்மியின் பரவும் திறன் குறைவாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று மனிதா்களின் செல்களில் இணைவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் மூக்குப் பகுதி அமைப்புகளின் மாதிரிகளில் கரோனா தீநுண்மிகளை செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது.

மூன்று வெவ்வேறு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகிய நிலைகளில் அந்தத் தீநுண்மிகள் 7 நாள்களுக்கு வைத்து கண்காணிக்கப்பட்டன.

இதில், குறைந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் இருந்த திநூண்மிகள் அதிக வீரியத்துடனும், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் மிக்க சூழலில இருந்த தீநுண்மிகள் வீரியம் குறைந்தும் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தச் சூழலில், மனிதா்களின் முக்கு துவாரங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கரோனா தீநுண்மிகள், வெப்பமான சூழலில் பரவும் திறன் இல்லாமல் இருப்பதற்கும், பருவ நிலை மாறும்போது அதன் திறன் அதிகரித்து மற்றவா்களிடம் பரவும் நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் அடங்கிய பிறகும், பருவநிலை மாற்றங்களின்போது அவ்வப்போது அந்த நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உளளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமா்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ்’ இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்த ஆய்வு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: