சிரியா மீது தொடர்ந்து தாக்குதல் – அமெரிக்கா!

Saturday, April 8th, 2017

சிரியாவில் மேலும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா எச்சர்க்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அதனைத் தெரிவித்துள்ளார்.

 உலக நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

சிரியாவில், விமானப் படைத் தளத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அவசரக் கூட்டத்துக்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு நகரில், ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் சுமார் 85 பேர் மரணமடைந்தனர். அதற்குப் பதிலடியாக அமெரிக்கா அந்தத் தாக்குதலை நடத்தியது. சிரியா அதிபர் பஷார் அல் அசாட்டுக்கு அளித்துவரும் ஆதரவை, ரஷ்யா மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஹேலி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts: