ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் !

Saturday, August 10th, 2019


இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மைகாலமாக சுற்றுலா பயணிகளால் ரோம் நகர் அதிகரித்து வருவதால் காலம் கடந்து நிற்கும் வரலாற்று சின்னங்களை அவற்றின் அருமை தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் சிதைத்து விடுவார்களோ என இத்தாலி அரசு கவலையடைந்தது.

எனவே, ‘ஸ்பானிஷ் படிகள்’ உட்பட மேலும் சில உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் ‘முகாமிடுதல்’ அல்லது வீடியோ மற்றும் புகைப்படமெடுப்பது உள்ளிட்டவற்றை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசு அறிவித்தது.

அதன்படி தற்போது ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதையடுத்து சிறப்பு சுற்றுலா பிரிவு பொலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விதிகளை மீறியவர்களுக்கு எதிராக 400 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: